Saturday, December 08, 2007

Star 21. வடக்கு நோக்கி என் முதல் பயணம் - A Tale of Twists

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

பொறியியற் படிப்பு முடித்தவுடன், பெங்களூரில் பணி புரிந்து வந்தேன். அப்போது ONGC நிறுவனத்திலிருந்து வேலைக்கான நேர்முக அழைப்பு என் சென்னை முகவரிக்கு வந்தது, அதற்கான எழுத்துத் தேர்வு நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு! நான் பெங்களூரில் நல்ல வேலையில் இருந்ததால், மும்பை / டில்லி போன்ற இடங்களுக்கு பணி நிமித்தம் செல்வதில் என் அன்னைக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நேர்முகத் தேர்வோ டேராதூன் (Dehradun) என்ற இடத்தில். இது நடந்தது 1987 ஜனவரியில்.

எனக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்திருக்கிற விஷயம் கடைசி நிமிடத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. அது கூட, என் சித்தி என் அன்னையிடம், 'ஒரு தேர்வுக்கோ அல்லது வேலைக்கோ செல்லலாமா/வேண்டாமா என்பதை உன் மகனே முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். இப்போது இதை நீ மறைத்து விட்டு, பின்னால் தெரிய வந்தால் அவன் ரொம்ப வருத்தப் படுவான். ONGC ஒரு பெரிய கம்பெனி, அவனுக்கு ·போன் போட்டு சொல்லி விடு' என்றெல்லாம் அறிவுறுத்திய பிறகு.

புதிதாக வேலையில் சேர்ந்திருந்த நான், என் மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி லீவு பெற்று, பெங்களூரிலிருந்து சென்னைக்கு விரைந்தேன். அன்றிரவே தில்லிக்கு ரயில் பிடித்தால் தான் நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை! நான் அது வரை வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்தது கூட கிடையாது. என் உறவினர் ஒருவர் மூலம் எமெர்ஜன்ஸி கோட்டாவில் டிக்கெட் வாங்கி (இதற்காக அலையோ அலை என்று காலையிலிருந்து மதியம் வரை அலைந்தேன்!), என் ஒன்று விட்ட சகோதரன் ஒருவனின் தில்லி முகவரியை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவனுக்கு நான் டில்லி வருவதாக ஒரு டெலிகிராம் கொடுத்து விட்டு மாலை தான் வீட்டுக்கு வந்தேன். அரக்க பரக்க தேவையானவற்றை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டு, கடவுளை வணங்கி விட்டு இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டேன். என் அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்ததைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை!!!

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பயணம், இரயிலில் ஏறி அடுத்த நாள் இரவு வரை ஜாலியாகவே அமைந்தது. ஒரு தூத்துக்குடி காங்கிரஸ்காரர், ஒரு மிலிட்டரிக்காரர், இரு இளைஞர்கள் ஆகியோருடன் அரட்டை அடித்தபடி பொழுது இனிமையாகவே கழிந்தது. முன்னிரவிலிருந்து (ஆக்ரா நெருங்குவதற்கு முன்பாகவே!) குளிர் நடுக்கத் தொடங்கியது ! ஸ்வெட்டரும் இல்லாமல், சரியான போர்வையும் இல்லாமல் உடம்பு ஒரு மாதிரி விறைத்து விட்டது ! பொட்டுத் தூக்கம் இல்லை; இரயில் நிறுத்தங்களிலெல்லாம், மண் கோப்பைகளில் கிடைத்த சூடான தேநீர் அருந்தினேன். வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் கடுங்குளிரின் தாக்கம் மறக்கவே முடியாதது !!!

என் சகோதரன் தில்லி இரயில் நிலையத்திற்கு வரவேண்டுமே என்ற ஓர் எண்ணம் தான் மனது முழுவதும். வரவில்லையென்றால், அவன் முகவரி தேடி குளிரில் அலைய வேண்டுமே என்ற கவலை வேறு. என் நல்ல நேரம், இரயில் நிலையம் வந்திருந்த அவன், சிரித்தபடி ஸ்வெட்டர் ஒன்றைத் தந்து, "நீ எடுத்து வரமாட்டாய் என்று எனக்குத் தெரியுமே!" என்றான். அதை அணிந்தபின் தான், பற்களின் ஆட்டம் நின்று, பேச்சே வந்தது !!! அடுத்த நாள் நேர்முகத் தேர்வு என்பதால், அன்று மாலையே டேராதூனுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டேன்.

அச்சமயம், கல்லூரி நண்பன் ஒருவன் டேராதூனில் அவனது நிறுவன பயிற்சிக்காகத் தங்கியிருந்தான். அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சென்றபோது, அவன் ஊர் சுற்றப் போயிருந்தான். திபெத்தியன் சந்தையை ஒரு ரவுண்ட் அடித்து, ஒரு நல்ல ஸ்வெட்டரை வாங்கிக் கொண்டு, அவனுக்காகக் காத்திருந்து அந்த திருவாழத்தானை இரவு பத்தரை மணிக்குத் தான் பார்க்க முடிந்தது. அது அவன் நிறுவன விடுதி என்பதால், இரவு நான் அங்கே தங்க இயலாது என்று கவுத்து விட்டான். நண்பன் கொஞ்சம் மப்பில் இருந்தாலும், என்னுடன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஏதோ ஒரு பாடாவதி லாட்ஜில் நான் தங்க ஏற்பாடு செய்து விட்டுப் போய் விட்டான்.

எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் லாட்ஜ் மேற்பார்வையாளரிடம் என்னை காலை ஆறரை மணிக்கு (எட்டு மணிக்கு நேர்முகத் தேர்வு) எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கச் சென்றேன். காலையில் விழிப்பு வந்து மணி பார்த்தால், ஏழு ஐம்பதைக் காட்டியது ! என் ஹிந்தி அறிவை நொந்தபடி, பல் மட்டும் துலக்கி விட்டு, ஓர் ஆட்டோ பிடித்து தேல்பவன் (ONGCயின் தலைமை அலுவலகம்) நோக்கி விரைந்தேன்!

**********************************************
ஆட்டோவுக்கு பணம் கொடுக்கும்பொது தான், தங்கிய லாட்ஜின் பெயரையோ, அது இருந்த இடத்தின் பெயரையோ கவனிக்கத் தவறியது சுள்ளென்று உரைத்தது. என்னுடைய பெட்டியை அந்த லாட்ஜின் அறையில் விட்டு வந்திருக்கிறேனே ? ஆட்டோக்காரரின் கையைத் தடவி, "முஜே, அபி ஆயா, ஹைனா, கிதர்ஸே ?" என்றவுடன் அவர் பார்த்த பார்வையே, 'என்ன மாதிரி கிறுக்கன்டா இவன் ? இவன் எங்கேயிருந்து வந்தான்னு நம்மை ஏன் கேக்கறான் !' என்றது. நான் விடாமல், மறுபடியும், "பாய்சாப், ஹமாரா ஹோட்டல் கா நாம் க்யா ஹை ?" என்றவுடன், 'நான் சற்று மரை கழண்ட கேஸோ' என்ற அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய் விட்டது ! "முஜே கோயி ஹோட்டல் கா நாம் நஹி மாலும், சம்ஜா ?" என்று கடுப்பினார் ! ஒரு பத்து நிமிடங்கள் போராடி, நான் என்ன கேட்கிறேன் என்று புரிய வைத்து (அல்லது அவருக்கு புரிந்து!) 'ஐயோ பாவமே ! இதைக் கேட்கவா இவ்வளவு சிரமப்பட்டாய் ?' என்பது போல் கனிவாகப் பார்த்து, நான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைக் கூறினார். லாட்ஜின் பெயரைக் குறித்துக் கொண்டு, அவருக்கு சுக்ரியா சொல்லி, ஆனந்தக் கண்ணீர் விட்டேன் ! (இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))

நல்ல வேளை, தேர்வுக்கு வந்தவர்களின் பட்டியலில் எனக்கு முன் பலர் இருந்ததனால், என் முறை வர மதியம் ஆனது. தேர்வுக்கு வந்திருந்த ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு பெண்ணுடன் 'கடலை' போட்டு விட்டு , நேர்முகத் தேர்வை சிறப்பாகவே எதிர்கொண்டு, புதுத் தோழிக்கு பிரியா விடை கொடுத்து விட்டு, மாலை லாட்ஜுக்கு வந்து பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி, தில்லிக்கு எந்த மார்க்கமாகப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, மற்றொரு கல்லூரி நண்பன் அதிசயமாக கண்ணில் பட்டான். அவனும் ஏதோ வேலை விஷயமாகத் தான் டேராதூன் வந்திருந்தான். இருவருக்குமே தில்லி பயணத்திற்கு, துணைக்கு ஆள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியைக் கொண்டாடவும், இரவுக்குளிரை எதிர்கொள்ளவும் உற்சாக பானம் ! தில்லி செல்லும் இரவு இரயிலில் ஏறி, அரட்டை அடித்தபடி ஜாலியாகப் பொழுதைக் கழித்தோம் !

அடுத்த நாள், தில்லியை அடைந்து அன்று முழுதும் (இரவு இரயிலில் சென்னை கிளம்பும் வரை) தில்லியை சுற்றிப் பார்க்கலாம் என்ற முடிவு செய்து, பிரகதி மைதான் பக்கம் திரிந்து கொண்டிருந்தபோது, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சந்தித்த தூத்துக்குடி காங்கிரஸ்காரர் என்னைப் பார்த்து விட்டார். "தம்பி, வாங்க, வாங்க, போயிட்டே பேசுவோம்" என்று என்னைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டார். "தேர்வில நல்லா பண்ணீகளா ?" என்று அன்பாக வினவினார். "இப்போ ஒருத்தரை ஒங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன், பாருங்க!" என்று புதிர் போட்டபடி, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, திரு.G.K.மூப்பனார் முன் நிறுத்தி விட்டார் !!! மூப்பனார் அவர்கள் சக்தி வாய்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த காலம் அது.

மூப்பனார் அவர்கள், தூத்துக்குடிக்காரரிடம் சற்று நேரம் பேசி விட்டு, 'பையன் யாரு ?' என்று வினவ, இவர். "தெரிஞ்ச புள்ளைங்க ! என்ஜினியரிங் முடிச்சுட்டு, ONGC-லே இன்டர்வியூக்காக வந்திருக்காப்ல" என்றவுடன், மூப்பனார் இரண்டொரு வார்த்தைகள் என்னிடம் பேசிவிட்டு, இருவருக்கும் விடை கொடுத்தார். அது தான், நான் மூப்பனாரை என் வாழ்வில், முதலும் கடைசியுமாக நேரில் பார்த்தது.

அன்று, குடியரசு தின ஊர்வலத்தின் ஒத்திகையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிரவே, அதே கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டு, ஒரு வழியாக சென்னையின் வெப்பத்திடம் மீண்டும் தஞ்சம் அடைந்தேன்! அதன் பிறகு, என் வாழ்வில் பல இடங்களுக்கு (உள்நாடு/வெளிநாடு என்று) பயணம் மேற்கொண்டிருந்தாலும், நான் most exciting trip என்று கருதுவது, 'பயமறியா இளங்கன்றாக' நான் மேற்கொண்ட இந்த டில்லி/டேராதூன் பயணத்தை தான்! என் வாழ்வின் மறக்கவே முடியாத பிரயாணமும் கூட !!!


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
என்றென்றும் அன்புடன்
பாலா

17 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

நல்ல பயணக் கட்டுரை :)))))))))

dondu(#11168674346665545885) said...

//இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))//
அதுவும் நீங்க ஹிந்தி பிரச்சார் சபையில் சேர்ந்து (திருவல்லிக்கேணி அக்பர் சாஹேப் தெருவில் உள்ளது) படித்திருந்தால் தேராதூனில் தூள் கிளப்பியிருக்கலாம். ஏனெனில் அங்கு பேசப்படுவது ஹிந்தி பிரச்சார் சபையில் கற்ற இலக்கணசுத்த ஹிந்தி. நான் ஹரித்துவார் ரிஷிகேஷுக்கு சமீபத்தில் 1967-ல் சென்றபோது எனக்கு ஒரு சிரமமும் இல்லை. இந்த அழகுக்கு அங்கு பார்ப்பவரிடம் எல்லாம் மாங்கு மாங்கென்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஹிந்தியிலேயே பேசி அறுத்தேன். :)

தமிழகத்தின் ஒரு முழுதலைமுறையின் எதிர்காலத்தை இவ்வாறுதான் திராவிட இயக்கம் நாசமாக்கியது. அதெல்லாம் செய்து விட்டு, தன் பேரன்களையும் பேத்திகளையும் மட்டும் திருட்டுத்தனமாக ஹிந்தி படிக்க வைத்து மந்திரிகளாக்கி மகிழ்ந்தது.

இதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள். அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.

நான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

dondu arrived ;-)))

enRenRum-anbudan.BALA said...

//அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.
//
Not to mention the atrocities perpetuated by the so called backward on Dalits !

K.R.அதியமான் said...

Dondu Sir,

the agitation is against hindi thinipu and not against hindi language. both are different. Hindi can be made an optional subject in all govt schools and those who wish can learn it.

three language formula is a joke, while those idiots in hindi belt refuse to learn even english properly. most of the so called literate people can barely write their names in their mother tongue.
Learning mother tongue (tamil here)and English is most important and useful. the great majority of the people here will live, work and die within TN. those who migrate to other states can learn hindi or other languages. It is important for the rural poor to learn tamil and english properly. that itself is a heavy burden for most. then they can learn hindi if needed.

the govt is pouring billions into hindi prachar saba, etc. and there are ample avenues to learn hindi easily here. In my hometown Karur which is a booming textile town, many businessmen who are school droupouts speak excellent hindi while they don't know english. necessetiy is the mother of invention. hence those who need can learn. it is highly unfair to thrust it down the throats of millions who have no use of it in their lifetime within TN.

And recently the govt is trying to impose hindi in Supreme and high courts. it is counter-productive. You must have read Cho's arguments against this short sighted measure in recent Tuglak.

dondu(#11168674346665545885) said...

//the agitation is against hindi thinipu and not against hindi language. both are different. Hindi can be made an optional subject in all govt schools and those who wish can learn it.//
அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் 1965-லும் 1968-லும் ஹிந்தி வகுப்புகளுக்கு எதிராக பெரிய போராட்டமே நடந்தது. திமுக தலைவர்கள் தமது பேச்சு வன்மையால் ஹிந்தியை படிப்பதே பாவம் என்பது போன்ற பிரமையை உருவாக்கினர். அப்போதெல்லாம் நீங்கள் பிறக்கவே இல்லை. அக்காலக்கட்டத்தைப் பற்றி இப்போது எப்பாடியெல்லாம் படித்தாலும் நேரில் கண்டு உணர்ந்ததற்கு ஈடாகாது.

அதில் மயங்கி ஒரு முழுதலைமுறையே ஹிந்தி படிக்காது போயிற்று. இவ்வளவும் செய்துவிட்டு திருட்டுத்தனமாக தத்தம் குழந்தைகளை மட்டும் படிக்க விட்டனர்.

அதிருக்கட்டும், எனது பின்னூட்டத்தின் முதல் பாதியை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள், இரண்டாம் பாதியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//இதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள். அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.

நான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு?//

pottu thakku

K.R.அதியமான் said...

Dondu Sir,

I have met many anti-hindi agitators of 60s and have interacted with them. (our family was hardcore DMK in those days).

While the violence and fasicst mentality of DMK and others cannot be justifed, pls read what Rajaji, R.K.Narayan wrote about this vital issue.

The crux of the problem is that whether hindi or english should be our link language. Obviously english scores. But for English language and the British empire (which was expolitative but had many useful side-effects like Railways and ICS, commona law, english, etc) which united us politically for the first time since Ashoka's time, India as we see now probabaly would not have become unified. Patel had a tough time in integrating the 500 odd princely states with Indian Union in 1947. Obviously these states would not have voluntrily unified to form Indian union ; there is the vital question of link language.

People like you, me and Bala may need hindi because of our professions. but there is no rationale for the crores of students (who as such cannot master tamil and english properly)
to master three languages, which is impossible. You haven't answered my point about this three language formula ?

There is no objection to hindi being an optional subject in all schools. only making it compulsory is the issue here.

and as Telugu is the second largest spoken language in India, can we make Telugu as the second link language and make the hindi belt learn telugu compulsorily ?
will those people accept it gracefully ?

If a person from UP (hindi belt) travels in interior AP, Bengal, Karnataka or TN (or even Kerala) without knowing the local language (and English), he too will face the same trouble as Bala did in Dehradun. hence such arguments
are not valid. it is a myth that hindi is widely understood everywhere. may be in some pockets in metros.

and regarding your second point : i agree with you. The correct definition of Paarapaniyam (Brahminism) is : the word used to describe the whole hierarchy of caste system as it exists (not just the brahmins alone). anyone who justifies, accepts caste superiorty or practises untouchabilty can be termed as paarpaniyavathi (irrespect of his/ her caste). for the want of a better term, this word is used.

but this vital point is lost in all the hype and emotions here.

said...

//அதில் மயங்கி ஒரு முழுதலைமுறையே ஹிந்தி படிக்காது போயிற்று. இவ்வளவும் செய்துவிட்டு திருட்டுத்தனமாக தத்தம் குழந்தைகளை மட்டும் படிக்க விட்டனர்.//

இந்தி படித்தால் மந்திரி ஆகிவிடலாம் என்பது போல படம் காட்டுகிறார் டோண்டு. அவருக்கு இந்தி தெரியும். தெரிஞ்சு என்னத்தை சாதித்தார். வடக்கே போய் இந்தி பேசினாராம். சீன மொழி தெரிந்தால் சீனா போய் சீனர்களிடன் சீன மொழியில் பேசலாம். ரஷ்யமொழி படித்தால் ரஷ்யா போய் ரஷ்யரிடம் ரஷ்யமொழியில் பேசலாம்.
அதுக்கென்ன இப்போ? இதில் என்ன இந்திக்கு தனி சிறப்பு?


//இதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள்.//

உங்களுக்கு ஒற்றை நிலைதான். அது பார்ப்பணிய பாசமும் திராவிட துவேசமும்ங்கிற நிலைப்பாடுதான்.


//அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு?
//

மேய போன புத்தியைதான் சமீப 50 வருஷமாய் மாத்தி பிராமனாளையும் அவன் வகுத்த சாதி முறையையும் எதிர்த்து நிற்க வைச்சிருக்கோமுல்ல!

- வேல் -

dondu(#11168674346665545885) said...

Dear Athiyaman,

There is the all-embracing word of உயர்சாதீயம். It has been seen time and again that the word Parppaniyam has been misused to denigrate Brahmins. Not all are fair-minded as you are.

There is precedence to this sort of coining new words, say Harijans for Paraiyans, mentally-challenged for mentally retarded and so on. When a person of Asuran's or Thiyagu's nature talks of Parpaniyam, the denigration of Brahmins is a default construct.

What is wrong with உயர்சாதீயம்?

By the way I too am against the imposition of Hindi. In fact I put up my arguments against that in chaste Hindi in the then UP as mentioned in my comment in Bala's post.

Please see my latest post at http://dondu.blogspot.com/2007/12/blog-post_12.html

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

//மேய போன புத்தியைதான் சமீப 50 வருஷமாய் மாத்தி பிராமனாளையும் அவன் வகுத்த சாதி முறையையும் எதிர்த்து நிற்க வைச்சிருக்கோமுல்ல!//
எங்கே எதிர்க்கிறீங்க? அந்த ஜாதி முறையை வச்சுத்தானே வன்கொடுமையெல்லாம் பண்ணறீங்க. அதைத்தானே இப்பதிவிலே சாடினேன். அதற்கு சரியான பதிலைக் கூறுங்கள். அப்படி வன்கொடுமையை நீங்கெல்லாம் பண்ணிட்டு அப்புறம் இன்னொருத்தன் மேலே பழியை போடறீங்களே ஜாட்டான்களே. அதைத்தான் சொன்னேன்.

போய் தமிழை சரியா படிச்சுட்டு வாருங்கள்.

மத்தவங்களையெல்லாம் படிக்காதேன்னு சொல்லிட்டு தங்க பேரப்பசங்களை படிக்க வச்சது ஏமாற்றுவேலைதானே?

டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

அதியமான், டோண்டு சார், அனானி, , DFC, வேல்பாண்டி,

வரு¨கைக்கும், விவாதத்திற்கும்(!) நன்றி.

நாஸ்டால்ஜியா பதிவை, இந்தி திணிப்பு / பார்ப்பனீயம், மன்னிக்கவும், உயர் சாதீயம் குறித்த விவாதத்திற்கு தள்ளிக் கொண்டு போய் விட்டீர்கள், பரவாயில்லை :)

said...

I regret for using this forum for responding to the commentquery of Mr. Adhiyaman.

//and as Telugu is the second largest spoken language in India, can we make Telugu as the second link language and make the hindi belt learn telugu compulsorily ?
will those people accept it gracefully ?//

Did Telugus ask for that?

Almost all states including West Bengal, Punjab, Assam and other South Indian states reversed their position on Hindu issue. They are taking a pragmatic line now. Unfortunately it is our TN politicians who lacks the grit and determination to introduce Hindi in Government Schools which will definintely benefit our rural masses.

//People like you, me and Bala may need hindi because of our professions. but there is no rationale for the crores of students //

You are absolutely wrong. May be you and Bala and Dondu may manage everywhere with English (buttler english is always there). It is the poor rural Tamils who suffer a lot when they go to North or even the neighbouring states because of lack of Hindi exposure. Almost two decades ago, I worked for a project in Bellary in Karnataka (near Andhra border) where the Tamil labours felt humiliated for not being able to communicate with fellow Kannadigas and Telugus... they were ridiculed not for not knowing Kannada or Telugu, but for their lack of Hindi knowledge.

Take our Malayalee people for instance, they have an advantage in Northern Indian and Gulf countries over us especially due to their Hindi knowledge, which is far better than ours.

If we can read, write and speak Hindi, then we would be the superior race in the whole of our subcontinent, we can push Biharis, Jats, why even Mallus and Kannadiga chauvnists we can kick.

Tamil Vazhga! Hindi Vazhga!

முகமூடி said...

எல்லாம் சரி, இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி என்பதே தெரியவில்லையே, சரி பின்னூட்டத்திலாவது யாராவது கேட்டிருப்பார்கள் என்று பார்த்தால் "நல்ல பயணக் கட்டுரை" என்ற அனானி கமெண்ட் தவிர்த்து ஒரு பின்னூட்டமும் பதிவு சம்பந்தமாக பேசக்காணோம்!!! சரி இப்பவாவது சொல்லுங்க. இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி.

(தயவு செய்து இந்த வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்.. ஏகப்பட்ட இடத்தில் இதை செய்து செய்து மண்டை காயுதுன்னா இங்கயுமா?)

enRenRum-anbudan.BALA said...

வாங்க முகமூடி சார், பார்த்து ரொம்ப நாளாச்சு, பிஸின்னு நினைக்கிறேன் !

//எல்லாம் சரி, இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி என்பதே தெரியவில்லையே, சரி பின்னூட்டத்திலாவது
யாராவது கேட்டிருப்பார்கள் என்று பார்த்தால் "நல்ல பயணக் கட்டுரை" என்ற அனானி கமெண்ட்
தவிர்த்து ஒரு பின்னூட்டமும் பதிவு சம்பந்தமாக பேசக்காணோம்!!!
//
அது தெரிஞ்சது தானே :) நம்ம மக்கள் கோடு போடச் சொன்னா ரோடு போட்ருவாங்க, அதாவது, பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பின்னூட்டம் போடறதைச் சொல்றேன் ;-)அதுவும், டோ ண்டு ஆஜராயிட்டா, கேக்கவே வேணாம் !

//சரி இப்பவாவது சொல்லுங்க. இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி.
//
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ?பாலாவுக்கு வேலை தராம இருக்க முடியுமா என்ன ? (எனக்கே இது கொஞ்சம் ஓவரா தான் படுது:)))

ONGC-யில் வேலை கிடைச்சு, ஒரு மூணு வருஷம் மும்பையில் குப்பை கொட்டினேன். Bombay High-ல இருக்கிற பல எண்ணெய் ரிக் மற்றும் பிளாட்ஃபார்ம்களுக்கு விசிட் பண்ணியிருக்கிறேன். ஹெலிகாப்டர்லே கிட்டத்தட்ட 125 கிமீ கடல் மேல் பயணிக்க வேண்டும்.

//(தயவு செய்து இந்த வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்.. ஏகப்பட்ட இடத்தில் இதை செய்து செய்து
மண்டை காயுதுன்னா இங்கயுமா?)
//
இன்னிக்குத் தான் அதை எனேபிள் பண்ணினேன், இந்த(நூத்துக்கணக்கான!) ஸ்பாம் (spam) கமெண்டுகளின் (எனது மெயில் பெட்டி மீதான) படையெடுப்பைத் தடுப்பதற்காகவே ! எது ஸ்பாம், எது நல்ல கமெண்டுன்னு பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் விடுகிறது :) Anyway, கஷ்டமுன்னா எடுத்து விடுகிறேன்.

என் நட்சத்திர வாரப் பதிவுகள்(அனைத்தையும்) சமயம் இருக்கும்போது வாசிக்கவும், கருத்து இருப்பின் (கட்டாயம் இருக்கணும் :))) கூறவும் !

http://www.thamizmanam.com/inc/star_post_list.php?date=2007-12-03

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//எல்லாம் சரி, இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி என்பதே தெரியவில்லையே, சரி பின்னூட்டத்திலாவது யாராவது கேட்டிருப்பார்கள் என்று பார்த்தால் "நல்ல பயணக் கட்டுரை" என்ற அனானி கமெண்ட் தவிர்த்து ஒரு பின்னூட்டமும் பதிவு சம்பந்தமாக பேசக்காணோம்!!!
//
தமிழ் வலைப்பதிவுலகில வழமையா அது தானே நடந்து வருகிறது ... விவாதம் என்ற பெயரில் அடிச்சுக்கணும் ...

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails